மக்கள் கேட்பது உணவு; அரசியலமைப்பு திருத்தமல்ல: ரணிலிடம் தெரிவித்தது ‘மொட்டு’!

Date:

நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு அதிக முன்னுரிமை வழங்குவதற்கு பதிலாக அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டு வர முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று பிரதமரிடம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த குழுவினர் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

இந்த சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, அரசியலமைப்பு திருத்தங்கள் மூலம் அம்பாறை மக்களின் உரப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமாயின் அவ்வாறானதொரு விடயம் கொண்டுவரப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மக்கள் கேட்பது அரசியலமைப்பு திருத்தங்களை அல்ல மாறாக வயிற்றுக்கு உணவு மற்றும் உரம் மட்டுமே என்றார்.

நீதியமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

கெஷ்ம் தீவு மீதான அமெரிக்க தாக்குதலால் பாதிப்புக்களில்லை

ஈரானின் கெஷ்ம் தீவின் மீது நேற்றிரவு அமெரிக்கா நடத்திய தாக்குதலில், எந்தவொரு...

காமக்கொடூரன் மீண்டும் கைது!

பெண் மருத்துவர் ஒருவரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அவரை அச்சுறுத்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்