வடமராட்சி துன்னாலை பகுதியில் முதியவர் கொண்டு சென்ற மிளகாய்த்தூள் பொதியை, மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
நேற்று (3) மாலை இந்த சம்பவம் நடந்தது.
துன்னாலையிலுள்ள அரைக்கும் ஆலையொன்றில் மிளயாக்த்தூள் அரைப்பதற்காக கொடுத்த முதியவர், நேற்று மாலை அதை பெற்றுக்கொண்டு வரும் போது இந்த வழிப்பறி சம்பவம் நடந்துள்ளது.
முதியவர் நடந்து வரும் போது, வீதியோரமாக மோட்டார் சைக்கிளுடன் நின்ற இரண்டு இளைஞர்கள், அவர் கடந்து சென்றதும், பின்னால் சென்று பொதியை பறித்துக் கொண்டு தப்பியோடிள்ளனர்
முதியவர் கூக்குரலிட்டதையடுத்து அந்த பகுதியில் ஆட்கள் ஒன்றுசேர்ந்த போதும், திருடர்கள் மின்னல் வேகத்தில் மாயமாகியிருந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1