அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரில், துப்பாக்கதிதாரிக்கு சிகிச்சை அளித்த அறுவை சிகிச்சை மருத்துவரும் ஒருவர் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட மருத்துவரிடம், தாக்குதல்தாரி முதுகு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.
மே 19 அன்று அறுவை சிகிச்சை செய்ததாகவும், மே 24 அன்று மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறதுஇ
எனினும், அவருக்கு சத்திரசிகிச்சையின் பின்னர் முதுகில் வலி ஏற்பட்டுள்ளது. அதற்காக அவர் மருத்துவரை குற்றம்சுமத்தி வந்தார்.
மருத்துவமனையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது வலி குறித்து முரண்பட்டு வந்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மைக்கல் லூயிஸ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
டுல்சா நகரின் சென்ட் பிரான்சிஸ் மருத்துவமனைக்குள் துப்பாக்கி, கைத்துப்பாக்கி இரண்டுடனும் நுழைந்த லூயிஸ் நால்வரைச் சுட்டுக்கொன்றார்.
சம்பவத்துக்குப் பின் அவர் தன்னைத்தானே சுட்டு உயிரிழந்தார்.
லூயிஸ் எழுதி வைத்திருந்த கடிதத்தின் மூலம் அவர், அறுவை சிகிச்சை செய்த மருத்துவரையும், குறுக்கே வருவோரையும் சுடும் நோக்கத்துடன் மருத்துவமனைக்குச் சென்றது தெளிவானதாகக் காவல்துறை சொன்னது.
சம்பவத்தில் மற்றொரு மருத்துவர், நோயாளி, ஊழியர் ஆகியோர் உயிரிழந்தனர்.
டெக்சஸ் தொடக்கப் பாடசாலை துப்பாக்கிச் சூடு ஏற்படுத்திய அதிர்வு அடங்குதற்கு முன்னர், ஒக்லஹாமா சம்பவம் இ்டம்பெற்றுள்ளது.