திரப்பனை பகுதியில் உள்ள அரச பாடசாலை ஆசிரியர் ஓய்வறைக்குள் 15 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 24 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரை திரப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் சில வாரங்களுக்கு முன்னர் மாணவியை பாடசாலை ஆசிரியர் ஓய்வறையில் வைத்து துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமி தனது தாயிடம் கூறியதையடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முறைப்பாடு தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகளை அடுத்து இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை நேரத்திற்கு பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
1
+1
+1
+1
1