திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை பாதாள உலகக்குழு தலைவன் தனுக ரோஷன் தனது பிறந்தநாளை 18 கிலோகிராம் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
கெசல்வத்தை பகுதியை மிரட்டிய பயங்கர ரௌடியான தனுக ரோஷன், போதைப்பொருள் கடத்தல், கொலை, கப்பம் பெறுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பொலிசாரால் தேடப்பட்டு வருபவர்.
2015 பொதுத் தேர்தலின் போது ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தை தொடர்ந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு தப்பிச் சென்றார்.
அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்குள் பலமுறை நுழைந்து கொலைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அத்துடன், பாதாள உலகக்குழுவையும், போதைப்பொருள் குழுவையும் வழிநடத்தி வந்தார்.
போதைப்பொருள் வழக்கில் தமிழக பொலிசாரால் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அமைக்கப்பட்டுள்ளார்.
சில நாட்களின் முன் தனது பிறந்தநாளை சிறப்பு முகாமிற்குள் கொண்டாடியுள்ளார். இதன்போது 18 கிலோகிராம் நிறையுடைய கேக் வெட்டி, பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.