212 லீற்றர் டீசல் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் புத்தளம் நகர சபை உறுப்பினர் ஒருவரை புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நகரசபை உறுப்பினரின் வீட்டில் டீசல் பதுக்கி வைக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புத்தளம் பொலிஸ் தலைமையக ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் சுமார் 100,000 ரூபா பெறுமதியான டீசல் மற்றும் பல லீற்றர் பெற்றோல் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் நகரசபை உறுப்பினர் டீசலை பெற்றுக்கொண்ட விதம் தொடர்பில் பொலிஸாரிடம் தெளிவாக கூறவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட நகரசபை உறுப்பினர் இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1