பெயரை மாற்றிய துருக்கி!

Date:

துருக்கி தன்னைத் ‘துருக்கியே’ என்ற பெயரில் அழைக்கும்படி ஐ.நாவிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

எல்லா மொழிகளிலும் “Turkiye” என்ற இனி அழைக்கும்படியும், அந்த மாற்றம் உடனடியாக நடப்புக்கு வரும் என்றும் தெரிவித்தது.

கடந்த சில ஆண்டுகளாகவே, துருக்கி அது தயாரிக்கும் பொருள்களில் “made in Turkiye” என்பதைப் பயன்படுத்திவருகிறது.

இதன் மூலம் Turkey என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வான்கோழிக்கும், நாட்டின் பெயருக்கும் வேறுபாடு தெரியும் என்றும் கூறப்பட்டது.

பெயர் மாற்றம் வேடிக்கையாக இருக்கலாம்; ஆனால் நாட்டில் பல ஆண்டுகளாக அதிபராக இருக்கும் ரிசெப் தயீப் எர்துவான், நாட்டின் மரியாதையை அனைத்துலக அரங்கில் பாதுகாப்பதற்கு எடுக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்று அந்நாட்டு நிபுணர் ஒருவர் The New York Times இடம் கூறினார்.

ஒட்டமான் சாம்ராஜ்யத்திலிருந்து துருக்கி சுதந்திரம் பெற்ற நூறாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளன. அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலும் நடைபெறவிருக்கிறது.

பெயர் மாற்றம், அதை ஒட்டி கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...

யாழில் சம்பவம்: 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது மாமா!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 7 வயதான தனது மருமகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில்,...

தாயார் கைத்தொலைபேசியை பறித்ததால் சிறுமி விபரீத முடிவு!

யாழ்ப்பாணத்தில் 15 வயதான சிறுமியயொருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். சிறுமி கைத்தொலைபேசி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்