அமெரிக்காவில் ஆரம்பப் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி அகல்வதற்குள் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர் தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணத்தில் உள்ள டுஸ்லா எனுமிடத்தில் உள்ள மருத்துவமனையில் தான் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
இது குறித்து டுஸ்லா காவல்துறை துணை தலைவர் எரிக் டல்க்லேஷ் கூறுகையில், இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்தார். அந்த நபர் எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பது தெரியவில்லை. அவரிடமிருந்து கைத்துப்பாக்கி ஒன்றும் ரைஃபில் ரக துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. மருத்துவமனையின் ஒவ்வொரு அறையில் வேறு ஏதும் சந்தேகத்துக்குரிய நபர்கள் இருக்கின்றனரா என்று தீவிர சோதனை நடத்தியுள்ளோம் என்றார்.
கடந்த மாதம் டெக்சாஸ் நகரில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் 2 ஆசிரியைகள் என 21 பேர் கொல்லப்பட்டனர். ஏற்கெனவே அந்த இளைஞர் வீட்டில் தனது பாட்டி மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டே வந்திருந்தார். இந்த சம்பவத்தில் மொத்தம் 22 பேர் பலியாகியிருந்தனர்.
அதற்கு முன்னதாக ஃபஃபலோ சூப்பர் மார்க்கெட்டில் இன்வெறியால் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கறுப்பினத்தவர் 10 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன.