ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான கட்டண உயர்வு இன்று (1) முதல் அமலுக்கு வருகிறது.
வழக்கமான ரயில் கட்டணம், பார்சல் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களை அதிகரிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.
இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்களில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு இருக்கைகளுக்கு இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என ரயில்வே வர்த்தக துணைப் பொது மேலாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் காலங்களில் தினசரி ரயில் பயணச்சீட்டு விலைகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1