எரிவாயு கோரி கிளிநொச்சி மக்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டம்!

Date:

கிளிநொச்சியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்வதற்கு அதிகாலை முதல் காத்திருந்த மக்கள் ஏ-9 வீதியை மறித்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தொடர்ந்து எரிபொருள் மற்றும் சமயல் எரிவாயு சிலிண்டர் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் தினமும் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வருகின்றனர்

இந்த நிலையில் இன்று (01) கிளிநொச்சிக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வந்துள்ள நிலையில் அவற்றை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட இன்று அதிகாலை முதல் வரிசையில் காத்திருந்த போதும் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்டாத்தையடடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் எரிவாயு சிலிண்டர்களை ஏ-9 வீதியின் குறுக்காக வைத்து வீதியை மறித்து போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்

இதையடுத்து சம்பவ இடத்துக்கு கிளிநொச்சி பொலிசார் விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டு எரிவாயு சிலிண்டர் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது அடுத்து குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மக்களை ஏமாற்றும் கடற்தொழில் அமைச்சர்!

யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் எந்த விதமான சாதகமான பதிலையும்...

ஆக்கிரமிப்பு இனங்கள் குறித்து எப்போதும் எச்சரிக்கை அவசியம்: பொ.ஐங்கரநேசன்

உலகம் எதிர்கொண்டுள்ள தலையாய சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் காலநிலை மாற்றத்துக்கு அடுத்து இரண்டாவது...

விகாரைக்குள் சிறுவனை சின்னாபின்னமாக்கிய பிக்கு: தண்டனையை உறுதி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம்!

2009 ஆம் ஆண்டில் ஒரு சிறுவனைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்