25.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
உலகம்

உக்ரைனுக்கு IRIS-T வான் பாதுகாப்பு அமைப்பை வழங்குகிறது ஜேர்மனி!

ஜேர்மனியினால் IRIS-T வான் பாதுகாப்பு அமைப்பு உக்ரைனுக்கு  வழங்கப்படும் என்று ஜனாதிபதி ஓலாஃப் ஸ்கோல்ஸ் கூறினார்.

கனரக ஆயுதங்களின் விநியோகத்தை அதிகரிக்குமாறு ஜெர்மனியின் எதிர்க்கட்சிகள் மற்றும் உக்ரைன் கோரிக்கை விடுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனி “போரின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து விநியோகித்து வருகிறது” என ஸ்கோல்ஸ் மேலும் கூறினார்.

படையெடுப்பின் தொடக்கத்தில் இருந்து, ஜெர்மனி ஏற்கனவே 15 மில்லியனுக்கும் அதிகமான வெடிமருந்துகள், 100,000 கையெறி குண்டுகள் மற்றும் 5,000 க்கும் மேற்பட்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது.

IRIS-T SLM என்பது ஒரு நடுத்தர தூர மேற்பரப்பு முதல் வான் பாதுகாப்பு அமைப்பாகும்.

பாராளுமன்றத்தில் தனது உரையில் விமர்சகர்களுக்கு பதிலளிக்கும் போது ஷோல்ஸ், ரஷ்ய படையெடுப்பிற்கு தனது அரசாங்கம் “ஜெர்மனியில் ஒரு பாரிய கொள்கை மாற்றத்துடன்” கனரக ஆயுதங்களை ஒரு போர் மண்டலத்திற்குள் அனுப்புவதன் மூலம் பதிலளித்ததாக கூறினார்.

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க, ஜெர்மனி பங்குதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஜனாதிபதி கூறினார். சோவியத் பாணி ஆயுதங்களை உக்ரைனிடம் ஒப்படைக்க ஜெர்மனி காலாட்படை சண்டை வாகனங்களை (IFV) கிரேக்கத்திற்கு வழங்கும் என்றும் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

சமீப வாரங்களில், தலைநகரான கிய்வைக் கைப்பற்றத் தவறிய பின்னர் ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையை கிழக்கில் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், உக்ரைனின் கனரக ஆயுதங்களுக்கான கோரிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஆப்கானிஸ்தானுக்குள் திடீர் வான் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

Pagetamil

பறவை மோதியதால் விபரீதமா?: பயணிகள் விமானம் விபத்து; ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

Pagetamil

உகண்டாவை உலுக்கும் டிங்கா டிங்கா வைரஸ்: இந்த வைரஸ் தொற்றினால் தொடர்ந்து நடனமாடிக் கொண்டேயிருப்பீர்கள்!

Pagetamil

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்!

east tamil

Leave a Comment