திங்கட்கிழமை முதல் தனியார் பேருந்து சேவை முழுமையாக நிறுத்தப்படும்!

Date:

பேருந்துகளுக்கு முறையான டீசல் கிடைக்காததால், திங்கட்கிழமை (6) முதல் அனைத்து தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கொழும்பில் தெரிவித்துள்ளார்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக விஜேரத்ன தெரிவித்தார்.

மேலும், டீசல் பெறுவதற்கு பேருந்துகள் பல நாட்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது என்றார்.

தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போவில் எரிபொருள் வழங்குவதாக கூறப்பட்டாலும், அதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என.விஜேரத்ன தெரிவித்தார்.

இந்த வாரம் பயணிகள் பேருந்துகளுக்கு டீசல் வழங்க அரசு முன்னுரிமை அளிக்காவிட்டால், திங்கள்கிழமை முதல் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

நவம்பர் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது!

இலங்கையில் நவம்பர் மாதம் வரை எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்று இலங்கை...

அரச வெசாக் விழாவை முன்னிட்டு மூடப்பட வேண்டிய இடங்கள்

2026 ஆம் ஆண்டிற்கான அரச வெசாக் விழாவை முன்னிட்டு இறைச்சி விற்பனை...

டிக்கோயா இரட்டைக்கொலை சந்தேகநபர் தப்பியோட்டம்

ஹட்டன் - டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கூரிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்