தந்தையும், மகளும் சடலங்களாக மீட்பு!

Date:

களுத்துறை, ஹீனடியங்கல பிரதேசத்தில் தந்தையும் மகளும் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை, ஹீனடியங்கல, கிரீன்பீல்ட் பகுதியைச் சேர்ந்த 69 வயதான சமரசிங்க சுனில் ஜயசிங்க மற்றும் அவரது மகள் சமரசிங்க சச்சித்ரா ஹன்சமலி ஜயசிங்க (33) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

குறித்த வீட்டில் பெற்றோரும் மகளும் தங்கியிருந்ததுடன், தந்தை நாற்காலியில் அமர்ந்த நிலையிலும், மகள் அறையில் தரையிலும் சடலமாக கிடப்பதாகவும் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

களுத்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினரால் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலங்கள் களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மஹிந்தவிற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடமிருந்து அழைப்பாணை கிடைக்கவில்லையாம்

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பாக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...

ஈரான் தவறாக நடந்தால் மீண்டும் தாக்குவோம்: ட்ரம்ப்

ஈரானுடனான ஒரு ஒப்பந்தத்தின் கருத்தாக்கம் குறித்து தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அதன்...

எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஈரான்

அமெரிக்காவின் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஏற்பட்ட அதிகரித்து வரும் சேமிப்பு நெருக்கடியைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்