கொரோனா தொற்றால் உயிரிழந்த தமிழ் அரசு கட்சி உறுப்பினர்களின் அஞ்சலி நிகழ்வு

Date:

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்களை நினைவேந்தும் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றது

திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இன்று (29) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணியளவில் உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள இந்து கலாச்சார மண்டபத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா  தலைமையில் இடம்பெற்றது.

தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர்.க.துரைரெட்ணசிங்கம், தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் திருகோணமலை நகரசபை உறுப்பினருமான அமரர் கோ.சத்தியசீலராஜா, தமிழரசு கட்சியின் குச்சவெளி திரியாய் வட்டார கிளையின் முன்னாள் தலைவர் பொன்னம்பலம் இராமநாதன், கிண்ணியா பைசல் நகர் வட்டாரகிளை முன்னாள் தலைவர் மு.க.மஹ்ரூப் முன்னாள் வில்லூன்றி வட்டாரக்கிளை தலைவர் கனகமகேந்திரா ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பொதுச்செயலாளர் பா.சத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், இரா.சாணக்கியன், மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

–ரவ்பீக் பாயிஸ்-

spot_imgspot_img

More like this
Related

முதல் முறையாக நாடொன்றின் மீது இனப்படுகொலை நடத்தியதாக தீர்ப்பு: சர்வதேச நீதிமன்றம் வழங்கியது!

மியான்மர் தனது ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக இனப்படுகொலை செய்துள்ளது என்று சர்வதேச...

நீதிமன்றில் சாட்சியமளிக்க சென்ற செயற்பாட்டாளர் மீது கொலைவெறித் தாக்குதல்: யாழில் பயங்கரம்!

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் கொலை வழக்கொன்றில் சாட்சியமளிக்க சென்ற அரசியல் செயற்பாட்டாளரும்,...

16 வயதைத் திருமணத்திற்கான விருப்பத்தெரிவாக மாற்ற வேண்டும்; இலங்கை உலமா கட்சி கோரிக்கை!

நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுமியின் நலன்புரி மற்றும் தொடர்ச்சியான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்