27 C
Jaffna
January 2, 2025
Pagetamil
கிழக்கு

அஞ்சலிக்கூட்டத்தை அரசியல் மேடையாக்க முயன்ற சாணக்கியன்: பொதுமக்கள் ‘கூ’ அடித்து எதிர்ப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசபுத்திரன் சாணக்கியன் உரையாற்றிய போது, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பான நிலைமையேற்பட்டது.

இன்று (29) திருகோணமலையில் இந்த சம்பவம் நடந்தது.

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்களிற்கான அஞ்சலி நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றது

திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இன்று (29) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணியளவில் உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள இந்து கலாச்சார மண்டபத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா  தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய இரா.சாணக்கியன், நிகழ்வு மேடையை தனது அரசியல் மேடையாக மாற்ற முயற்சிப்பதாக குறிப்பிட்டு, கலந்து கொண்டிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கூட்டத்திலிருந்த இளைஞர்கள் ‘கூ’ சத்தமெழுப்பி சாணக்கியனின் உரைக்கு இடையூறு ஏற்படுத்தினர்.

இதையடுத்து, அவர் அஞ்சலி உரையை மட்டும் ஆற்றிவிட்டு அமர்ந்து விட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலை மாவட்டத்திற்கு புதிய இடைக்கால அரசாங்க அதிபர் நியமனம்

east tamil

காணிகள் கையகப்படுத்தலை எதிர்த்து குச்சவெளி பிரதேசத்தில் மக்கள் போராட்டம்

east tamil

சாமிந்த ஹெட்டியாரச்சி புதிய பதவிக்கு நியமனம்

east tamil

Update: மீகமுவ பெண்ணின் சடலம் திருகோணமலையில்!

east tamil

வாழைச்சேனை கடற்பரப்பில் கரையொதுங்கிய மியன்மார் படகு

east tamil

Leave a Comment