25.4 C
Jaffna
January 18, 2025
Pagetamil
இந்தியா

தூத்துக்குடி துறைமுகம் வழியாக இலங்கைக்கு அரிசி நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி

தூத்துக்குடி துறைமுகம் வழியாக இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி நிவாரண பொருட்கள் பேக் செய்யப்பட்டு அனுப்பும் பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு தமிழக அரசு நிவாரண பொருட்களை ஏற்கனவே சென்னையில் இருந்து அனுப்பியது.

அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் புதுக்கோட்டை, நெல்லை,திருச்சி, திருவண்ணாமலை சிவகங்கை, மதுரை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 70 அரிசி ஆலைகள் மூலம் தூத்துக்குடி குடோனுக்கு வரவழைக்கப்பட்டு பேக்கிங் செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகம் வழியாக நிவாரண பொருட்கள் அனுப்பும் நடவடிக்கையை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தூத்துக்குடி துறைமுகம் அருகில் உள்ள குடோன்களில் ஆய்வு செய்தார்.

இதில் சென்னையில் இருந்து அனுப்பப்பட்ட 7 ஆயிரத்து 500 டன் அரிசியுடன் சேர்த்து தூத்துக்குடியிலிருந்து 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி என மொத்தம் 80 கோடி ரூபாய் மதிப்பிலான அரிசிகள், 28 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்கள், 15 கோடி ரூபாய் மதிப்பிலான 500 மெட்ரிக் டன் பால் பவுடர் ஆகிய பொருட்கள் தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

தூத்துக்குடி துறைமுகம் வழியாக இந்த பொருட்கள் அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த பொருட்கள் துறைமுகம் வழியாக விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்திய தேர்தல் குறித்து மன்னிப்பு கோரிய மெட்டா நிறுவனம்!

east tamil

“கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் எம்ஜிஆர்” – தவெக தலைவர் விஜய் உருக்கம்

Pagetamil

புலிப்பூச்சாண்டி வேண்டாம்: பழ.நெடுமாறனின் விண்ணப்பத்தை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

குடிபோதையில் மணமகனின் மோசமான செயல்

east tamil

அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டில் கவனம் பெற்ற இன்பநிதி

Pagetamil

Leave a Comment