அதிக விலைக்கு பெற்றோல் விற்பனை செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அளுத்கம கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் ஊழியரின் மனைவியே கைது செய்யப்பட்டார்.
ஒரு லீற்றர் எரிபொருளை 800 ரூபாவிற்கு விற்பனை செய்த போது கையும் மெய்யுமாக சிக்கினார்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்திய போது, தனது கணவர் கொண்டு வரும் பெட்ரோலை தான் விற்பனை செய்வதாக கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1