29.2 C
Jaffna
April 11, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

விமல் வீரவன்சவின் மனைவிக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக பொய்யான தகவல்களை வழங்கியமை தொடர்பில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சசி வீரவன்சவுக்கு 100,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதவான் அறிவித்தார்.

போலி கடவுச்சீட்டை வைத்திருந்தமைக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 2015 ஜனவரி 23ஆம் திகதி சஷி வீரவன்சவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தது.

சஷி வீரவன்ச 1967ஆம் ஆண்டு பிறந்ததாகவும், பாஸ்போர்ட் போலியாக அவரது பிறந்த ஆண்டு 1971 எனக் குறிப்பிடப்பட்டதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

சசி வீரவங்சவிடம் இரண்டு பிறந்தநாள் கொண்ட இரண்டு தேசிய அடையாள அட்டைகள் இருப்பதாகவும் அந்த நேரத்தில் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்

யாழ், கிளி, மன்னாரில் சங்கு அணியின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

பிள்ளையான் கைது!

Pagetamil

கொழும்பு மாநகரசபை, பல யாழ் உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை!

Pagetamil

முன்னர் ஒன்றாக வந்தீர்கள்… இப்போது மூன்றாக வந்துள்ளீர்கள்; தமிழர்களுக்கிடையிலானதே மீனவர் பிரச்சினை: மோடி- தமிழ் கட்சிகள் சந்திப்பில் பேசப்பட்டவை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!