29.6 C
Jaffna
March 4, 2025
Pagetamil
இலங்கை

சிறுநீரக, புற்றுநோயாளர்களிற்கான மருந்துகளிற்கு பெரும் தட்டுப்பாடு; நீரிழிவு நோயாளர்களிற்கும் விரைவில் சிக்கல்!

சிறுநீரகம் மற்றும் புற்றுநோயாளிகளுக்கு தேவையான பல மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரசு மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அந்த ஒன்றியத்தின் தலைவர் அஜித் திலகரத்ன, தற்போது இவ்வாறான நோயாளிகள் பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர் என்றார்.

ஒரு மருந்து கட்டும் துண்டு அல்லது பிளாஸ்டர் கூட வைத்தியசாலைகளில் காண முடியாத நிலை எதிர்காலத்தில் உருவாகும்.

சிறுநீரக நோயாளிகளின் இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் கையிருப்பு குறைந்து வருவதாகவும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான மருந்துகளும் தீர்ந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த மருந்துகள் இல்லாமல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மூலம் எதிர்பார்க்கப்படும் முடிவுகளை உறுதி செய்ய முடியாது என்றார்.

புற்று நோயாளிகள் வாய்வழி சிகிச்சையைப் பெறுகிறார்கள் என்றும் மற்றவர்கள் இந்த சிகிச்சைகள் கடுமையான அட்டவணையில் தொடர வேண்டும் என்றும் திலகரத்ன கூறினார்.

எவ்வாறாயினும் அத்தியாவசிய மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக சிகிச்சையை ஆரம்பித்த நோயாளர்கள் மிகவும் அவல நிலையை எதிர்நோக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இருதய நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் பல மருந்துகளின் இருப்புக்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்குத் தேவையான கரையக்கூடிய இன்சுலின் இருப்புக்கள் தற்போது தீர்ந்து வருவதாக ஒன்றியத்தின் தலைவர் கூறினார்.

அரசாங்க மருந்தாளர் சங்கம், ஜனாதிபதி, முன்னாள் பிரதமர், முன்னாள் நிதியமைச்சர், சுகாதார அமைச்சு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு முன்னரே அறிவித்திருந்தும் இவ்வாறானதொரு நிலை ஏற்படும் என தெரிவித்திருந்தும் அதிகாரிகள் கவனம் செலுத்தத் தவறியதாகவும் அஜித் திலகரத்ன தெரிவித்தார்.

துரித நடவடிக்கை எடுக்கத் தவறியதன் விளைவாக நோயாளிகள் கடுமையான சுமைகளை எதிர்கொள்கின்றனர், அதேவேளையில் நாட்டின் மருத்துவமனை அமைப்பு செயல்பட முடியாமல் முழு சுகாதாரத் துறையின் வீழ்ச்சிக்கும் வழிவகுத்துள்ளதாக திலகரத்ன கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி 11 வயது மகன் பலி

Pagetamil

கொழும்பிலிருந்து நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் வந்தவர் கைது!

Pagetamil

யாழில் பெருந்தொகை கஞ்சா மீட்பு!

Pagetamil

தேடப்படும் தென்னக்கோன் இன்று சட்டத்தரணி ஊடாக சரணடையலாம்?

Pagetamil

இலஞ்சம் வாங்கிய இரு பொலிசார் கைது!

Pagetamil

Leave a Comment