29.8 C
Jaffna
March 29, 2024
கிழக்கு

வந்தது எரிவாயு: ஆனால் மிச்சம் தர 30 ரூபா இல்லை!

நாட்டில் நிலவும் தட்டுப்பாடு காரணமாக சமையல் எரிவாயுவை பெற மக்கள் கடுமையான நெருக்கடியை அனுபவித்து வருகின்றனர். அதனடிப்படையில் இன்று காலை முதல் சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் லிற்றோ நிறுவனத்தினால் சமையல் எரிவாயு  விநியோகிக்கப்பட்டது. தேவையுடைய மக்கள் வெயிலையும் கவனத்தில் கொள்ளாது நீண்டவரிசையில் நின்று எரிவாய்வை பெற்றுச்செல்கின்றனர்.

அம்பாறை மாவட்ட விற்பனை விலை (12.5kg) 4970 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தும் இங்கு ஒரு 12.5kg சமையல் எரிவாயுவை பெற மக்களிடமிருந்து 5000 ரூபாய் அறிவிடப்பட்டது. இது தொடர்பில் சமூக செயற்பாட்டாளர்கள் கேள்வியெழுப்பிய போது மக்களிடம் மிகுதியை கொடுக்க எங்களிடம் சில்லறை இல்லையென்று பிராந்திய விற்பனை முகவர் தெரிவித்தார். இதனால் பலத்த சலசலப்பு உருவாகியது.

மக்களிடம் இருந்து ஒருவருக்கு 30 ரூபாய் வீதம் பகல் கொள்ளையிடப்படும் இந்த பணத்தினால் மொத்தமாக ஒரு பாரிய தொகை இறுதியில் சேரும் என்றும், ஏற்கனவே விலை அதிகரித்திருப்பதை தாங்கமுடியாமல் திணறும் நாங்கள் இப்போது வெயிலில் காத்திருந்து பகல் கொள்ளை வழங்கவேண்டி உள்ளது என்றும் தெரிவித்த மக்கள் அத்தியாவசிய தேவையறிந்து இந்த சமையல் எரிவாய்வை 10000 கொடுத்தும் வாங்க தயாராக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

மிகுதியாக உள்ள அந்த 30 ரூபாய்க்குமாக பிஸ்கட் போன்ற மாற்று பொருட்களையாவது வழங்கியிருக்க முடியும். ஆனால் இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபைக்கு பொதுமக்களினால் தொலைபேசியூடாக அறிவிக்கபப்ட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை மக்கள் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை அநீதிக்கு எதிராக 5வது நாளாக போராட்டம்!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

கல்முனையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி: மீண்டும் வெடித்தது போராட்டம்!

Pagetamil

ஆற்றில் குதித்த திருடன்: ட்ரோன் உதவியுடன் தேடுதல்!

Pagetamil

Leave a Comment