ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தெணியான் காலமாகினார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி, கொற்றாவத்தையை சேர்ந்த கந்தையா நடேசு என்ற தெணியான், இன்று (22) மாலை அவரது இல்லத்தில் காலமாகினார். காலமாகும் போது அவருக்கு வயது 80.
சிலகாலமாக சுகவீனமுற்ற நிலையில் இருந்த இவர் இன்று மாலை காலமாகினார்.
ஆசிரியராகப் பணியாற்றிய தெணியான் ‘பிணைப்பு’ என்ற சிறுகதையுடன் எழுத்து பயணத்தை ஆரம்பித்தார். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாக ஒலித்த தெணியான், ஏராளம் சிறுகதைகளையும், முக்கியமான நாவல்களையும் எழுதியுள்ளார்.
அவர் சாகித்திய மண்டல பரிசையும் வென்றிருந்தார்.




