2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு பரீட்சார்த்திகள் தங்களுக்குரிய அனுமதி அட்டையில் உள்ள விவரங்களின் துல்லியத்தை சரிபார்க்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.
விண்ணப்பதாரர்கள் 011 278 4208 அல்லது 011 278 4537 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்குமாறும், அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பாடங்களுக்குத் தேவையான மாற்றங்கள் இருந்தால் அவர்களுக்குத் தெரிவிக்குமாறும் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன விண்ணப்பதாரர்கள் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள மொழி மூலம் மற்றும் பாடங்களை கவனமாக சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
போக்குவரத்து பிரச்சினைகள் கணிக்க முடியாதவை என்பதால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அனுப்புமாறு பெற்றோர்களிடம் தர்மசேன கேட்டுக்கொண்டார்.
மேலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வீதிகளை மறித்து போராடுபவர்கள், மாணவர்களை இடையூறு செய்ய வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.