கஜேந்திரகுமாருக்கு கொழும்பில் ரூ.2,000 கோடி சொத்துக்கள்; அவரை பாதுகாக்க சுயாதீனத்தை இழந்து விட்டார்; நாமே ‘ஒரிஜினல்; முன்னணி: வி.மணிவண்ணன்!

Date:

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கொழும்பில் ரூ.2,000 கோடி சொத்துக்கள் உள்ளன. அவர் சுயாதீனமாக இயங்க முடியாத நிலையில் இருக்கிறார். சொத்துக்களை பாதுகாக்கும் விதமாகவே செயற்படுகிறார். அவரை பார்க்க பரிதாபமாக உள்ளது என தெரிவித்துள்ளார் அகில இலங்கை தமிழ் காங்கிரசிலிருந்து நீக்கப்பட்ட, தற்போதைய யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் தமிழர்கள் இனஅழிப்பிற்கு உள்ளானார்கள் என கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு உத்வேகம் அளித்துள்ளது. இதற்காக உழைத்த புலம்பெயர் தமிழர்களிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

நாம் ஐரோப்பாவிற்கு சென்றிருந்த போது பிரான்ஸில் உள்ளூராட்சி மன்றங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசினோம். இலங்கையில் இனஅழிப்பு நடந்தது என்ற தீர்மானம் விரைவில் பிரான்ஸ் நாடாளுமன்றமும் தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்புள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரை பாவிக்க வேண்டுமென யாரும் எம்மை தடுக்க முடியாது. அந்த அமைப்பை தொடங்கியவர்களில் நானும் ஒருவர். முன்னணியின் பெரும்பாலானவர்கள் எம்முடன் இருக்கிறார்கள். ஒருவரை அமைப்பிலிருந்து நீக்குவெதெனில் சரியான பொறிமுறை அவசியம். அந்த பொறிமுறை யை சரியாக பயன்படுத்த வேண்டும். அல்லது தாமாக விலகிச் செல்ல முடியும்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் ஒழுங்காக, ஜனநாயக பண்புகளுடன் பயணிக்க தயாரில்லாத எவரும் வெளியேறிச் செல்ல பூரண சுதந்திரமுள்ளது.

முன்னணியின் முதலாவது தலைவராக பார்த்தீபனின் தந்தை வரதராஜன் இருந்தார். பின்னர் கஜேந்திரகுமார் தெரிவானார். பின்னர் எந்தவொரு தெரிவும் நடக்கவில்லை. விரைவில் முன்னணியின் தேசிய மாநாடு கூட்டப்பட்டு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட வேண்டும். அந்த நிர்வாகத்தை ஏற்காதவர்கள் முன்னணியை விட்டு விலக பூரண சுதந்திரம் உள்ளது.

யாழ் ஆரியகுளத்தை மாநகரசபையிடமிருந்து பறிக்கும் முயற்சிகள் நடக்கிறது. அதை என்ன விலை கொடுத்தாவது தடுப்போம்.

அது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி, அமைதியின்மையை ஏற்படுத்தும். ஆரியகுளத்தை வைத்து அரசியல் செய்வதை அனைவரும் விட்டு விடுங்கள்.

கஜேந்திரகுமார் அண்ணையில் நான் கோபப்படுவதில்லை. பரிதாபப்படுகிறேன். ஆரியகுளத்தை புனரமைக்க நாம் முயன்ற போது அருகிலுள்ள விகாராதிபதி தடுத்தார். கஜேந்திரகுமார் அண்ணையாட்களும் தடுத்தார்கள். அவரது இடத்தில் நீங்களிருந்தாலும் அதைத்தான் செய்வீர்கள். கொழும்பில் உங்களிற்கு 1000, 2000 கோடி சொத்துக்கள் இருந்தால், நீங்களும் இந்த நிலைப்பாடுதான் எடுக்க வேண்டி வரலாம். அவரால் சுயாதீனமாக இயங்க முடியாதுள்ளது. நீங்களும் கொழும்பில் பிறந்து வளர்ந்து குடும்ப உறவுகளுடன் இருந்திருப்பீர்கள் எனில் அவரை மாதிரியே 1000, 2000 கோடிகளிற்கு மேல் சொத்துக்களை வைத்திருந்தால் இதே நிலைப்பாடுகளையே எடுக்க வேண்டியிருக்கும்.

 

spot_imgspot_img

More like this
Related

‘என்னை வெட்டியவர் வலியால் எப்படி துடிக்கிறார் என நேரில் பார்க்க வந்தேன்’: துன்னாலை வாள்வெட்டு சந்தேகநபர் பகீர் வாக்குமூலம்!

யாழ், வடமராட்சி, துன்னாலை பகுதியை சேர்ந்த இளம்குடும்பஸ்தர் ஒருவர் பருத்தித்துறையில் வெட்டிக்கொல்லப்பட்ட...

மெக்கா மீதான ஹூதிகளின் ட்ரோன் தாக்குதல் முயற்சிக்கு பரவலான எதிர்ப்பு

மெக்காவை குறிவைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் முயற்சியை சவூதி...

காட்டு யானைகளின் அச்சுறுத்தல் – வனஜீவிகள் அலுவலகம் அமைக்கவும் திட்டம்

சம்மாந்துறை அலவக்கரை மற்றும் அதனை அண்டிய கிராமப் பகுதிகளில் பகல் வேளைகளில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்