கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலன் கருகி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (22) முதல் ஜூன் 1ஆம் திகதி வரை மாலை 6.30 மணிக்கு பின்னர் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மே 22 மற்றும் மே 29 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மின்வெட்டு இருக்காது.
மேலும், மே 22 முதல் ஜூன் 1ம் திகதி வரை மற்ற நாட்களில் மாலை 6.30 மணிக்கு மேல் மின்வெட்டு இருக்காது.
எவ்வாறாயினும், கைத்தொழில் வலயம் மற்றும் கொழும்பு நகர வர்த்தக வலயம் தவிர்ந்த ஏனைய இடங்களில் பரீட்சைகள் இடம்பெறாத நேரங்களில் மதியம் 12 மணி முதல் மாலை 6.30 மணி வரை 1 மணித்தியாலம் 45 நிமிடங்கள் முதல் 2 மணித்தியாலம் 15 நிமிடங்கள் வரை மின்சாரம் தடைப்படும்.
கைத்தொழில் வலயங்கள் (காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை) மற்றும் கொழும்பு நகர வர்த்தக வலயத்தில் (காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை) அந்த நாட்களில் 3 மணி நேர மின்வெட்டு ஏற்படும்.