விளக்கமறியலில் உள்ள எம்.பிக்கள் நாடாளுமன்றம் வந்தனர்

Date:

கொழும்பு காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க ஆகியோர் விசேட பாதுகாப்புடன் சிறைச்சாலையிலிருந்து இன்று (20) பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இருவரும் பாராளுமன்ற அறையில் தங்கியிருந்ததை காணமுடிந்தது.

இருவரையும் பாராளுமன்றத்திற்கு அழைத்து வருமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நேற்று (19) பணிப்புரை விடுக்கப்பட்டதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் இருவரும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்றும் (20) பாராளுமன்றத்தை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பு அதிரடிப்படையினரும் உஷார் நிலையில் காணப்பட்டனர். சம்பவ இடத்தில் பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கிழட்டுச்சிங்கம் வருமாம்: ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் போடும் ‘சீன்’!

அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பேரணியில் முன்னாள் ஜனாதிபதி...

இலங்கையில் இனி சிம் அட்டை பெறும் முறையில் பெரும் மாற்றம்

சட்டவிரோதச் செயல்களுக்கு அலைபேசி இணைப்புகள் பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய இணைப்புகளுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்