தாக்குதலில் ஈடுபட்டவர்களிற்கு புனர்வாழ்வளியுங்கள்: சொன்ன நாமலிடம் சிஐடி வாக்குமூலம்!

Date:

காலி முகத்திடலில் மே. 9 ஆம் திகதியன்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டிருக்கின்றனர்.

இதேவேளை, இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாமல், கோட்டகோகம மீதான தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக  தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பெயரிடப்பட்ட அனைவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கோரப்பட்டவாறு சரணடைந்துள்ளனர் அல்லது வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர் என தெரிவித்தார்.

கொலைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கட்சி அரசியல் பாகுபாடின்றி சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும், அவ்வாறு செயற்படாவிட்டால் சட்டம் ஒழுங்கு மற்றும் சமூகம் சீர்குலைந்துவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்னால் அரசியல் நோக்கத்துடன் வன்முறைச் செயல்களை வழிநடத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் மற்றும் தாக்கத்திற்குப் பிறகு சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் என இரண்டு குழுக்கள் இருப்பதாக அவர் கூறினார்.

தூண்டப்பட்டு வன்முறைகளில் ஈடுபட்ட இளைஞர்கள் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் அதேவேளை, தாக்குதல் மற்றும் தீவைப்புச் செயல்களை வழிநடத்தியவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கிழட்டுச்சிங்கம் வருமாம்: ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் போடும் ‘சீன்’!

அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பேரணியில் முன்னாள் ஜனாதிபதி...

இலங்கையில் இனி சிம் அட்டை பெறும் முறையில் பெரும் மாற்றம்

சட்டவிரோதச் செயல்களுக்கு அலைபேசி இணைப்புகள் பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய இணைப்புகளுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்