படகு மூலம் அவுஸ்திரேலியா புறப்பட்ட 21 பேர் கைது!

Date:

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கடற்கரையில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேரை மட்டு புதுக்குடியிருப்பு கடற்கரையில் வைத்து இன்று வியாழக்கிழமை அதிகாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதுடன் 2 படகுகளை கைப்பற்றி காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து சம்பவதினமான இன்று 2 மணியளவில் அதிகாலையில் விசேட அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு கடற்கரையில் சுற்றிவளைத்து சோதனைநடவடிக்கையை மேற்கொண்ட போது இரு படகுகளில் அவுஸ்ரோலியாவுக்கு சட்டவிரோதமாக செல்வதற்கு தயாராகிய நிலையில் பெண்கள் உட்பட 21 பேரை கைது செய்தடன் இரு படகுகளை மீட்டு ஒப்படைத்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி யாழ்ப்பாணம் மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் களுவாஞ்சிக்குடியை சேர்ந்த இதன் பிரதான சூத்திரதாரி தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்