மாளவிகா மோகனன் நடித்த படுக்கையறை காட்சி குறித்து கேள்வி கேட்ட ரசிகர் ஒருவருக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தில் நடித்தவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தனுசுடன் நடித்த ‘மாறன்’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓடிடியில் வெளியானது.
இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்கள் கேள்விக்கு பதிலளித்த மாளவிகா மோகனன் பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்தார்.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் தனுசுடன் ‘மாறன்’ படத்தில் நடித்த போது அந்த படத்தில் இடம்பெற்ற படுக்கையறை காட்சி எத்தனை முறை படமாக்கப்பட்டது என கேட்டார்.
இந்த கேள்விக்கு பதிலளித்த மாளவிகா, ‘உங்கள் கேள்வியை விட உங்கள் மண்டைக்குள் இருக்கும் மோசமான எண்ணம் தெரிய வருகிறது’ என்று பதிலளித்துள்ளார்.
மாளவிகாவின் இந்த பதிலடி பதிவு தற்போது வைரலாகி வருகிறது.