பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் தெரிவு ஆரம்பித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ரோஹினி குமாரி விஜேரத்னவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆளும் பொதுஜன பெரமனவின் தரப்பின் அஜித் ராஜபக்ஷவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
இதேவேளை, தியத்த உயனவிற்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில் உள்ள பாராளுமன்ற நுழைவாயில் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று பாராளுமன்றத்திற்கு அருகில் நடைபெறவுள்ளது.




