25.8 C
Jaffna
December 13, 2024
Pagetamil
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் கைதான பிக்குவிற்கு பிணை!

லொலுவாகொடவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தனவின் வீட்டிற்கும், அவரது சகோதரரின் வீட்டிற்கும் தீ வைத்து சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் கைதான அத்துபொடே தம்ம கிட்டி தேரரை தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு அத்தனகல்ல பதில் நீதவான் ஜயசேகர ரணசிங்க பிரேமதாச உத்தரவிட்டுள்ளார்.

லோலுவாகொடவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன மற்றும் அவரது சகோதரரின் வீட்டுக்கு கடந்த 9ஆம் திகதி இரவு தீவைக்கப்பட்டதாக கூறப்படும் தீவைப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட  பொலிஸார் விகாராதிபதியை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய நல்ல பொலிஸ் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் காஞ்சன சமரகோன், கடந்த 9ஆம் திகதி இரவு பெருமளவான மக்கள் லோலுவாகொடவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தனவின் வீட்டிற்கும் அவரது சகோதரரின் வீட்டிற்கும் தீ வைத்ததாக தெரிவித்தார்.

அதை அடக்க காவல்துறை பெரும் முயற்சியை எடுத்ததாக குறிப்பிட்டார்.

அந்த இடத்தில் ஏராளமானோர் குவிந்திருந்தனர். சம்பவ இடத்தில் விகாராதிபதியும் பிரசன்னமாகியிருந்தார். தீவைப்பை தடுத்து நிறுத்த வந்ததாக விகாராதிபதி கூறியிருந்தார். ஆனால் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தாக்குதல் சம்பவத்திற்கு குழுவை வழிநடத்தியதற்காக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.

விகாராதிபதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி, சம்பவ இடத்திற்கு வந்த விகாராதிபதியே நிலைமையை கட்டுப்படுத்த முயன்றதாகவும், பொலிசார் பொய்யான தகவலை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ்ப்பாணத்தை மிரட்டும் எலிக்காய்ச்சல்: பிந்திய நிலவரம்!

Pagetamil

யாழ் மாவட்ட செயலகத்தின் முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

Pagetamil

ஃபோர்ட் சிட்டி ஆணைக்குழு நியமனம்

east pagetamil

இலிங்கநகரில் இளைஞர் வள நிலையம் திறப்பு

east pagetamil

படகு கவிழ்ந்து ஒருவர் பலி மட்டக்களப்பில் சோகம்

east pagetamil

Leave a Comment