கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த விரைவு ரயில் கடிகமுவ மற்றும் ரம்புக்கன ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது.
இதனால், மலையக ரயில் பாதையில் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.
புகையிரதத்தின் இரண்டு சக்கரங்கள் தடம் புரண்டுள்ளதாகவும், அண்மையில் எரிபொருள் விநியோகம் செய்யும் புகையிரதம் தடம் புரண்ட அதே இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.




