நாட்டில் வன்முறைகள் இடம்பெற்ற காலப்பகுதியில் பொதுமக்களை தூண்டும் நோக்கில் முப்படை அதிகாரிகளின் வீடுகளுக்கு தாக்குதல் நடத்தப்போவதாக சமூக ஊடகங்களில் அச்சுறுத்தல் விடுத்த முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரை நிட்டம்புவ பொலிஸார் இன்று (12) பிற்பகல் கைது செய்துள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி நாட்டில் வன்முறைச் சூழல் ஏற்பட்ட போதே சந்தேகநபர் இந்த அறிக்கைகளை வெளியிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தங்கள் வீடுகளுக்கு அடுத்தபடியாக இருக்கும் ஆயுதப்படை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் வீடுகளை தாக்க தூண்டும் விதமாக செயற்பட்டதாப, நிட்டம்புவ பொலிஸ் தலைமையகத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இராணுவத்தில் கடமையாற்றும் போது அதிகாரிகளின் கையொப்பங்களை போலியாக இட்ட குற்றச்சாட்டின் பேரில் இந்த சந்தேக நபர் 29.01.2020 அன்று இராணுவத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் நிட்டும்புவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.