வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெற்றிலைக்கேணி பகுதியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் திகதி இரவு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவரின் சடலம் நேற்று (11) மீட்கப்பட்டது.
42 வயதான சிவஞானம் சிவதாசன் என்பவரின் சடலமே மீட்கப்பட்டது.
கொலை செய்யப்பட்டவரின் மனைவியிடம் பொலிசார் வாக்குமூலம் பெற்று வருகிறார்கள். அவரது தம்பியும், மற்றொரு இளைஞனும் தலைமறைவாகியுள்ளனர்.
குடும்ப தகராறினால் இந்த கொலை நடந்ததாக தெரிய வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1