யாழ் பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்!

Date:

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வாரத்தின் முதலாம் நாள் நினைவு அஞ்சலி யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முற்றத்தில் இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

ஒரு நிமிட அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய இந்த நினைவேந்தலானது தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் மட்டும் ஊழியர் சங்க பிரதிநிதிகளால் மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு ஈகைச்சுடரும் ஏற்றப்பட்டது.

இதனையடுத்து கருத்து வெளியிட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்-

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பின் இறுதி நாட்களை முன்னிட்டு இவ்வாரம் இன அழிப்பு வாரமாக நினைவேந்தல்கள் வடகிழக்கு தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கப்பட்டுள்ளது

.இவ்வாரத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தாலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி மற்றும் நினைவேந்தலை தமிழர் தாயகம் இதயபூர்வமாக கடைப்பிடிக்க வேண்டும் பல்கலைக்கழக மாணவ சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவ ஒன்றிய தலைவர் , யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர், யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்கள், யாழ் பல்கலை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

2026 உயர்தர பரீட்சைக்கு அடையாள அட்டை கட்டாயம்!

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள...

60 வயது கள்ளக்காதலியை கொலை செய்தவருக்கு விளக்கமறியல்!

அலதெனியவின் யதிஹலகல பகுதியில் உள்ள தனது சட்டப்பூர்வ மனைவிக்குச் சொந்தமான வீட்டில்,...

பொன்.சிவகுமார் நினைவு ஏற்பாடு: வலி.கிழக்கு தவிசாளரிடம் பொலிசார் விசாரணை!

பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்