இந்திய மீனவர்களிற்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

Date:

கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது​ செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள்​ தொடர்பான வழக்கு இன்று (12) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதவான்​ பி.ஆர்​ இஸ்மாத் ஜெமில் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்து

இதன்போது​ 12 இந்திய மீனவர்கள் தொடர்பிலான குற்றச்சாட்டு பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்தமை,​ ​ இழுவை மடி வலைகளை உடைமையில்​ வைத்திருந்தமை​, இழுவை மடி வலைகைளை பயன்படுத்தி தொழில் மேற்கொண்டமை​ ஆகிய​ மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

வழக்கை விசாரித்த நீதிபதி ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருடகால சிறை தண்டனையை விதித்து விடுதலை செய்தார்.

அத்துடன் படகு உரிமம் தொடர்பிலான விளக்கத்திற்கு தவணையிடப்பட்டுள்ளது​. ​

இதே நேரம் வழமை போன்று​ இன்றைய தினம் இந்திய துணை தூதரக அதிகாரிகளும் மன்றில் சமூகமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

2 ஈரானிய தூதர்களை வெளியேற்றும் குவைத்

குவைத் எல்லைப் பகுதியில் ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து பதற்றம் மேலும்...

முதியோர் இல்லத்தில் தீ: 3 பேர் மாயம்!

ஹொரணை, பட்டகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட...

ஈரானின் தாக்குதலை முறியடித்ததாக கூறுகிறது அமெரிக்கா

வளைகுடாப் பகுதியில் ஈரான் நடத்திய தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்