கேகாலை நகைக்கடை ஒன்றில் தங்க நகைகள் திருடிய ஜோர்தான் மற்றும் எகிப்து நாட்டைச் சேர்ந்த தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நகைக்கடையில் நகை வாங்குவதை போல பாவனை செய்து, ரூ.553,000 மதிப்புள்ள தங்கச் சங்கிலிகளை திருடிக் கொண்டு இந்த ஜோடி தலைமறைவாகியுள்ளது.
கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி காட்சிகளின் அடிப்படையில் திருட்டு ஜோடி கண்டறியப்பட்டது.
கண்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.
தம்பதியினர் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மே 12 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக கேகாலை பொலிஸ் தலைமைப் பரிசோதகர் குலதுங்க தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1