அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியாவிவ் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்றது.
மக்களை வதைக்கும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என்னும் தொனிப் பொருளில் 2000 இற்கு மேற்பட்ட தொழிற் சங்கங்களால் நாடு பூராகவும் கதவடைப்பு போராட்டம் இன்று (06.05) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக ஒன்றிணைந்த தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா, புதிய பேரூந்து நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது யாழ் வீதி ஊடாக ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து அங்கிருந்து பசார் வீதி ஊடாக கண்டி வீதியை அடைந்து பழைய பேரூந்து நிலையத்தில் முடிவடைந்தது.
இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வதைக்கும் அரசாங்கமே வீட்டுக்கு போ என பதாதைகளை ஏந்தியவாறும், அரசாங்கத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறும் கறுப்பு கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பழைய பேரூந்து நிலையத்தை அடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏ9 வீதியை சுமார் அரை மணி நேரம் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிணைந்த தொழிற் சங்கத்தினருடன், வவுனியா பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்டனர்.