பாராளுமன்ற நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் நேற்றைய தினம் பேரணியாக பாராளுமன்ற நுழைவாயிலை வந்தடைந்த நிலையில் பொலிஸ் வீதித் தடையை அகற்ற முற்பட்ட போது பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்தனர்.
Inter University Protest In Polduwa Junction #lka #SriLankaEconomicCrisis pic.twitter.com/m9Ozf49Xau
— Pagetamil (@Pagetamil) May 6, 2022
பின்னர் குறித்த இடத்தில் கொட்டகை அமைந்து மாணவர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் மீண்டும் அவர்கள் மீது பொலிஸார் இன்று கண்ணீர்ப்புகைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
Inter University Protest In Polduwa Junction #lka #SriLankaEconomicCrisis pic.twitter.com/sTkfVdrfKn
— Pagetamil (@Pagetamil) May 6, 2022
அத்துடன்,மாணவர்கள் அமைத்திருந்த கொட்டகைகளும் துவம்சம் செய்யப்பட்டுள்ளது.
பொலிசாரின் தாக்குதலுக்கு எதிராக மீண்டும் அங்கு போராட்டம் நடந்து வருகிறது.
Inter University Protest In Polduwa Junction #lka #SriLankaEconomicCrisis pic.twitter.com/sTkfVdrfKn
— Pagetamil (@Pagetamil) May 6, 2022