யாழ்.ஊரெழுவில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் காணாமல்போயிருந்த 3 வயது குழந்தை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் ஊரெழு மேற்கில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது..
சம்பவத்தில் இரட்டை சகோதரர்களான 3 வயது குழந்தைகள் ஊஞ்சலில் விளையாடியுள்ளனர்.
இந்நிலையில் குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுத்துவிட்டு தாய் தேனீர் ஊற்றுவதற்குச் சென்றுவிட்டு திரும்பிவந்து பார்த்தபோது ஓரு குழுந்தை காணாமல்போயுள்ளது.
இந்நிலையில் வீட்டு வளவில் தேடிய பின்னர் கிணற்றில் பார்த்தபோது குழந்தை கிணற்றுக்குள் விழுந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ள்ளது.
பின்னர் கிணற்றிலிருந்து குழந்தை மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், குழந்தை உயிரிழந்துள்ளது.
கட்டுக் கிணற்றை சுழ தகரத்தினால் வேலியிடப்பட்டிருந்த நிலையில் அதில் ஏறியபோதே குழந்தை கிணற்றுக்குக்குள் விழுந்திருக்கலாம் என மரண விசாரணையில்
தொிவிக்கப்பட்டிருக்கின்றது. இதேவேளை கிருஷ்ணகாந்தன் சித்தாத் (வயது 3) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.