முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்றத்தின் ஆளும் கட்சியின் பின் வரிசையில் 33ஆவது ஆசனம் ஒதுக்கப்பட்டது.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் அந்த இருக்கையில் அமர்ந்திருந்தார்.
பசில் ராஜபக்ச நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்த பின்னர், புதிய அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கு முன்னர் சபையில் ஆளும் கட்சியின் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.
இதேவேளை, பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்த ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று ஆளும் கட்சி ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.
அவர் சுயேட்சை நாடாளுமன்றக் குழு உறுப்பினர்.
தமக்கு எதிர்க்கட்சி வரிசையில் ஆசத்தை ஒதுக்குமாறு சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இதன்படி, அவருக்கு எதிர்க்கட்சிவரிசையில் ஆசனத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1