இலங்கையின் பல முக்கிய வர்த்தக வங்கிகள் இன்று (4) டொலரின் விற்பனை விலையை 370 ரூபாவாக நிர்ணயித்துள்ளன.
முன்னணி தனியார் வர்த்தக வங்கியான சம்பத் வங்கியின் இணையத்தளத்தில் ஒரு டொலர் விற்பனை விலை 370 ரூபாவாகவும் கொள்வனவு விலை 355 ரூபாவாகவும் உள்ளது.
பிரித்தானிய பவுண்ஸின் விற்பனை விலை 465 ரூபாவாக உயர்ந்துள்ளது.




