இந்திய கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 6 பேர் இந்திய கடலோர காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
IMUL-A-0500-MTR இலக்க படகில் பயணித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் மாத்தறை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கைதானவர்கள் இன்று காலை 8.30 மணிக்கு கடலோர காவல்படையினரால், நாகப்பட்டினம் பொலிசாரிடம் கையளிக்கப்படவுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1