26.7 C
Jaffna
January 23, 2025
Pagetamil
குற்றம்

யாழ் ஆவா குழு தலைவனிற்கு பிறந்தநாள்: வவுனியா காட்டிற்குள் கேக் வெட்டி கொண்டாடிய அண்ணனின் விழுதுகள்: அள்ளி வந்தது எஸ்டிஎவ்!

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் விசேட அதிரடிப் படையினரின் சுற்றி வளைப்பில் காட்டுப் பகுதியில் கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஆவா குழுவின் பதாதைகளுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டு ஓமந்தைப் பொலிசாரிடம் நேற்று (01) மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா, ஓமந்தை, கோதாண்டர் நொச்சிக்குளம் காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த பகுதியில் விசேட அதிரடிப் படையினர் விசேட சோதனையை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது அங்கு கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடனும், ஆவா குழு என பெயரிடப்பட்ட பதாதைகளுடன் பலர் ஒன்று கூடி அவ் ஆயுதங்களால் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் 16 பேர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அவர்களிடம் இருந்து கத்தி, வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஓமந்தைப் பொலிசாரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் வவுனியா மருதங்குளம், அரசன்குளம், கோவில்குளம், கோழியாகுளம், சாஸ்திரிகூழாங்குளம், நெளுக்குளம், ஓமந்தை மற்றும் முல்லைத்தீவு, தலைமன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த 18 தொடக்கம் 26 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் எனவும், இருவர் 44 மற்றும் 45 வயதுடையவர்கள் எனவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 8 பேர் வவுனியாவைச் சேர்ந்தவர்கள், நால்வர் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள், இருவர் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள், ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், ஒருவர் மன்னாரைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகிறது.

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவை வழிநடத்தி தற்போது வெளிநாட்டுக்குத் தப்பியோடியுள்ள ரௌடியான வினோதன் என்பவரிற்கு நேற்று பிறந்தநாள் என்றும், அந்த ரௌடியின் பிறந்ததினத்தையே வவுனியா குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியதாகவும் தெரிய வந்துள்ளது.

யாழ்ப்பாண ரௌடி வினோதனின் படம் பொறித்த வாழ்த்துப் பதாதை அச்சிட்டு, அதில் தமது படங்களையும் பொறித்துள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
5
+1
3
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

உடுவில் பிரதேசத்தில் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

Pagetamil

கணவனின் கொடூரம்: மனைவியை கொன்று, சமைத்து, எலும்புகளை உரலில் இடித்த அதிர்ச்சி சம்பவம்!

east tamil

யாழ்ப்பாண கோழி பிடித்த 3 பேர் கைது!

Pagetamil

சிறுமியுடன் இயற்கைக்கு மாறான விதத்தில் பாலியல் சேட்டை: காமக்கொடூரனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை!

Pagetamil

இலங்கையை உலுக்கிய கொள்ளைக்கும்பல் கைது: 36 வயது தலைவி… 22 வயது கணவன்!

Pagetamil

Leave a Comment