பணியில் இருந்த போலீஸ் அதிகாரிக்கு பெண் ஒருவர் மசாஜ் செய்ய வைக்கப்பட்டுள்ளார். அந்த பெண் தனது மகனுக்கு ஜாமீன் கோரி காவல்நிலையத்திற்கு வந்தபோது நடந்த சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டு வைரலாகியுள்ளது.
பீகார் மாநிலம் சஹர்சாவில் உள்ள காவல்நிலையத்தில் காவலர் ஒருவருக்கு பெண் ஒருவர் மசாஜ் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து, அதிகாரி சசிபூஷன் சின்ஹா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மகனுக்காக ஜாமீன் வேண்டி வந்த பெண்ணை அராஜகமாக தனக்கு மசாஜ் செய்யவ் வைத்த போலீஸ் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சசிபூஷன் சின்ஹா பீகார் மாநிலம் சஹர்சாவில் உள்ள நௌஹட்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தர்ஹார் ஓபியில் பணியிலமர்த்தப்பட்டார். வீடியோவில், காவல் நிலையத்தில் வெறும் மார்போடு அமர்ந்திருந்த போலீஸ் அதிகாரி சசிபூஷன் சின்ஹாவுக்கு பெண் ஒருவர் மசாஜ் செய்வதைக் காணலாம்.
அந்த பெண் தனது மகனை சிறையில் இருந்து விடுவிக்க காவல் நிலையத்திற்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது சசிபூஷன் சின்ஹா தன்னை மசாஜ் செய்யும்படி கூறியதாக கூறப்படுகிறது. மேலும் மசாஜ் செய்து விட்டால் அவரது மகனை விரைவில் சிறையில் இருந்து வெளியே கொண்டு வருவதாக சசிபூஷன் உறுதியளித்ததாகவும் தெரிகிறது.
இதனை வீடியோவாக ட்விட்ட்ரில் பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்டார்.
அந்தப் பெண் அவருக்கு தொடர்ந்து மசாஜ் செய்ததால், சசிபூஷன் சின்ஹா ஒரு வழக்கறிஞரை போனில் அழைத்து, தனது மகனை ஜாமீனில் விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அந்தப் போலீஸ் அதிகாரி போனில், “அந்தப் பெண் ஏழை, எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும்? அதை ஒரு கவரில் போட்டு அனுப்புகிறேன். இரண்டு பெண்கள் ஆதார் அட்டையுடன் வருவார்கள். திங்கட்கிழமை முகவரி மற்றும் மொபைலுடன் அவர்களை அனுப்புகிறேன். பப்பு பாபு, நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நான் ஏற்கனவே 10,000 ரூபாய் செலவழித்துவிட்டேன்,” என்று சசிபூஷன் சின்ஹா வழக்கறிஞரிடம் தொலைபேசியில் கூறினார்.
ये बिहार पुलिस है, जो फरियादी महिलाओं से थाने में तेल की मालिश कराती है.
वीडियो में सहरसा जिले के डरहार ओपी के दारोगा शशिभूषण सिन्हा बताए जा रहे हैं, वीडियो वायरल. pic.twitter.com/BAyW68Vw8R
— Utkarsh Singh (@UtkarshSingh_) April 28, 2022
இந்த வீடியோ வைரலானதால், சஹர்சா எஸ்பி லிபி சிங், சசிபூஷன் சின்ஹாவை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.