அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் நடுநிலை வகிக்கலாமென்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடு என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன்.
இன்று யாழில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.
நம்பிக்கையில்லா பிரேரணையில் நடுநிலை வகிக்கலாமென்பது எனது நிலைப்பாடு. எனினும், ஜனாதிபதிக்கு எதிரான குற்றவியல் பிரேரணையை ஆதரிக்க வேண்டும்.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு வாக்களிப்பதில் நிபந்தனைகள் விதிக்கலாமா என்பது பற்றி இன்னும் சிந்திக்கவில்லை. நாளை எமது கூட்டணி கட்சிகளுடன் நடக்கும் கலந்துரையாடலில் அது பற்றி பேசி தீர்மானம் எடுப்போம் என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1