கட்டுப்பாட்டு விலைக்கு சிட்டையிட்டு பின் சீமெந்து விலையை மூன்றாம் நாள் அதிகரித்து கேட்ட வர்த்தகர் தொடர்பில் பொதுமகன் விசனம் வெளியிட்டுள்ளார்.
கிளிநொச்சி நகரில் பிரபல வர்த்தக நிலையம் ஒன்றிப் கடந்த 22ம் திகதி சிமெந்து பெற்றுக்கொள்ள பொதுமகன் சென்றுள்ளார். அப்போதைய கட்டுப்பாட்டு விலைக்கு (2350.00) சிட்டையிடப்பட்டு பற்றுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கான முழு பணத்தினை செலுத்திய பொதுமகன் தனிப்பட்ட தவிர்க்க முடியாத காரணமாக வெளிமாவட்டம் சென்றுள்ளார். சிட்டையிடப்பட்ட திகதியில் பொதுமகனல் பொருட்களை அன்றைய தினம் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்த நிலையில் வீடு திரும்பாத நபர் இன்ப நண்பர் ஒருவரின் உதவியுடன் குறித்த பொருட்களைப் பெற்றுக்கொள்ள நாடியுள்ளார். நேற்று நள்ளிரவு சீமெந்து பொதியின் விலை அதிகரித்துள்ள நிலையில் குறித்த பொருட்களை சிட்டையிடப்பட்ட விலைக்கு தரமுடியாது என கூறியுள்ளார்.
இந்த நிலையில் அதிருப்தி அடைந்த குறித்த பொதுமகன், புதிய விலைக்கான பணத்தினை தருவதாக கூறிய போதிலும், அவர்கள் வழங்க மறுத்துள்ளனர். இருப்பில் உள்ள சீமெந்து பைகள் தமது சொந்த தேவைக்கு உள்ளதாகவும் அதனை வழங்க முடியாது எனவும் பணத்தை திரும்ப தருவதாகவும் கூறியுள்ளனர்.
சம்பவத்தில் விசனமடைந்த பொதுமகன் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.