25.2 C
Jaffna
January 25, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

இலங்கை பொருளாதார நெருக்கடியை தீர்க்க உலகவங்கி 600 மில்லியன் டொலர் உதவி

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண உலக வங்கி 600 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக எதிர்வரும் காலங்களில் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் விடுவிக்கப்படும் என உலக வங்கியின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி சியோ கந்தா தெரிவித்துள்ளார்.

உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் இன்று (26) கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே கந்தா இதனைத் தெரிவித்தார்.

மருத்துவம் மற்றும் சுகாதாரத் தேவைகள், சமூகப் பாதுகாப்பு, விவசாயம், உணவுப் பாதுகாப்பு மற்றும் எரிவாயு தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த நிதி அனுப்பப்படும்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தொடர்ந்தும் உதவுவதாக உலக வங்கி பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

உலக வங்கியின் இலங்கைக்கான ஆலோசகர் ஹூசம் அபுதாகா, உலக வங்கியில் மனித அபிவிருத்திக்கான பயிற்சித் தலைவர் ரெனே சொலானோ, நிதி அமைச்சர் அலி சப்ரி, வர்த்தக மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன, தொழிலாளர் அமைச்சின் செயலாளர் எம்.பி.டி.யு.கே.மாபா பத்திரன, திறைசேரியின் பிரதிச் செயலாளர் ஆர்.எம்.பி.ரத்நாயக்க, தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.எச்.டபிள்யூ.ஏ.குமாரசிறி ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யோஷித ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

Pagetamil

தமிழ் கட்சிகளிற்கிடையிலான சந்திப்பு 27ஆம் திகதிக்கு தள்ளிவைப்பு!

Pagetamil

தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளும், வெட்டுப்புள்ளியும் வெளியீடு!

Pagetamil

அட்டகாசத்தில் ஈடுபட்ட அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

Leave a Comment