அனர்த்தங்களை குறைக்கும் திட்டத்தின் கீழ் செட்டிகுளம் வடகாட்டு குளம் புனரமைக்க நடவடிக்கை

Date:

அனர்த்தங்களை குறைக்கும் திட்டத்தின் கீழ் செட்டிகுளம், வடகாட்டுக்குளம் புனரமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சர்வோதயம் மற்றும் யுஎஸ்சைட் நிறுவனங்கள் இணைந்து அனர்த்தங்களை குறைப்பது தொடர்பான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அத் திட்டத்தின் கீழ் வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வடகாட்டுக் குளம் அனர்த்த முகைத்துவ பிரிவின் அனுமதியுடன் புனரமைப்புக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் புனரமைப்பு வேலைத்திட்டம் வடகாட்டு குளத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த திட்டம் தொடர்பான விபரங்கள், வடகாட்டு குளம் புனரமைப்பு தொடர்பான வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், வடகாட்டு குளம் புனரமைப்பின் ஊடாக ஏற்பட இருந்த அனர்த்தங்களை எவ்வாறு குறைக்க முடியும் என்பதுடன் விவசாய நடவடிக்கைக்கு குறித்த குளத்து நீரை பயன்படுத்துதல் தொடர்பாகவும் கிராம மக்களுக்கு அதிகாரிகளால் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், கமநல சேவைகள் திணைக்கள மாவட்ட உதவிப் பணிப்பாளர், சர்வோதயம் அமைப்பினர், கமக்கார அமைப்பினர், கிராம அமைப்புக்கள், விவசாயிகள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

கஸ்ஸப தேரர் குழுவிற்கு மனநல, போதைப்பொருள் சோதனை

அநுராதபுரம் ருவான்வெலிசாய அருகே நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில்...

இளம்பெண் படுகொலை: காதலன் கைது!

நுவரெலியாவில் உள்ள தங்குமிடம் ஒன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்...

மரணப்படுக்கையிலிருக்கும் சிவாஜியை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்கிறது ரிஐடி!

யாழ்ப்பாணம் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்