21வது திருத்தத்திற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரேரணைகள் இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து எஸ்.ஜே.பியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் கையளித்தார்.
பின்னர் சபாநாயகரிடம் பிரேரணை கையளிக்கப்பட்டது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல், சட்டமன்றம் மற்றும் நீதித்துறைக்கு அதிகாரப் பகிர்வு, 20வது அரசியலமைப்புத் திருத்தத்தை ரத்து செய்தல், தேசிய பாதுகாப்பு சபை, சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல் உள்ளிட்ட பல ஜனநாயக அம்சங்கள் இந்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1