எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் அமையவுள்ள அரசாங்கத்தின், சுதந்திரமான, பக்கச்சார்பற்ற மற்றும் வெளிப்படையான விசாரணையின் மூலம், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என கர்தினால் அவர்களுக்கு எழுத்துமூலமான வாக்குறுதியை வழங்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த உறுதிமொழியை ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் முன்வைப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
“ஈஸ்டர் ஆணைக்குழுவின் அனைத்து தொகுதிகளையும் பாராளுமன்ற இணையத்தளத்தில் வெளியிடுங்கள். மக்களை அதில் வசிக்குமாறு கோருவதற்கு அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் கொடுங்கள். தகவல்களை மறைக்காமல் அனைத்தையும் வெளியிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன். அனைத்தையும் வெளிப்படையாக விசாரிக்கவும்” என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.